Author: admin

  • ​நாடு முழுவதும் திருடப்படும் செல்போன்கள் கண்டறியப்படுவது எப்படி?

    புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் திருடப்​படும் செல்​போன்​கள், கண்​டறியப்​பட்டு வெற்​றிகர​மாக உரியவர்களிடம் சேர்க்​கப்​படும் தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக போலீ​ஸார் உதவி​யுடன் மத்​திய அரசு நடத்​தும் இணை​யதளம் உதவி வரு​கிறது. நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​கள் செல்​போன்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

    இதில் பலர் தங்​களது செல்​போன்​களை தவற​விடு​கின்​றனர். மேலும் சிலர், திருடர்​களிடம் தங்​களது செல்​போன்​களை பறி​கொடுக்​கின்​றனர். அதே​நேரத்​தில் திருடப்​படும் செல்​போன்​கள் குறித்து போலீஸ் நிலை​யங்​களுக்கு வரும் புகார்​கள் குறை​வாகவே உள்​ளன. இருந்​த​போதும் புகார் தரப்​பட்ட செல்​போன் திருட்​டு​கள் குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து அவற்​றைக் கண்​டறிந்து வரு​கின்​றனர்.

    அண்​மை​யில் உத்​தர பிரதேச மாநிலம் காஸி​யா​பாத் போலீஸ் நிலை​யத்​துக்கு 70-க்​கும் மேற்​பட்ட செல்​போன் பார்​சல்​கள் வந்​துள்​ளன. இவை அனைத்​தும் திருடப்​பட்டு வெவ்​வேறு மாநிலங்​களில் உள்ள கள்​ளச்​சந்​தைகளில் விற்​கப்​பட்​ட​வை. இவ்​வாறு கள்​ளச்​சந்​தைகளில் விற்​கப்​படும் செல்​போன்​களை தெரி​யாமல் வாங்​கும் நபர்​கள், அதன் உண்​மைத்​தன்​மையை அறிந்து அவற்றை போலீ​ஸார் உதவி​யுடன், சம்​பந்​தப்​பட்ட போலீஸ் நிலை​யங்​களுக்கு திருப்பி அனுப்பி வரு​கின்​றனர்.

    6 மாதங்​களுக்கு முன் காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒரு​வர், மிகக்​குறைந்த விலை​யில் ஒரு கடை​யில் செல்​போனை வாங்​கி​யுள்​ளார். அப்​போது​தான் அந்த செல்​போன் உ.பி. மாநிலம் காஸி​யா​பாத்​தி​லுள்ள ரஞ்​சித் ஜா என்ற சாஃப்ட்​வேர் இன்​ஜினீயருக்கு சொந்​த​மானது என்​பது தெரிய​வந்​தது. ரஞ்​சித் ஜா அந்த செல்​போனை கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 16-ம் தேதி தவற​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக அவர் போலீ​ஸில் புகார் கொடுத்​துள்​ளார்.

    இதுகுறித்து ரஞ்​சித் ஜா கூறும்​போது, “நான் ஒரு நேர்​முகத் தேர்​வுக்​குத் தயா​ராகி​விட்டு மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு ஆட்​டோ​வில் சென்​றேன். அப்​போது போன் பேசி​விட்டு போனை தவறு​தலாக கையி​லிருந்து நழுவ விட்​டு​விட்​டேன். பின்​னர் செல்​போனை தவற​விட்​டதை அறிந்து போலீஸ் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தேன். இப்​போது எனது போன் திரும்​பக் கிடைத்​துள்​ளது’’ என்​றார்.

    திருடு போகும் அல்​லது தவற​விடப்​படும் செல்​போன் எண்​களை அதன் ஐஎம்இஐ எண்​களை வைத்து தேடு​வதற்கு மத்​திய அரசு புதி​தாக ஒரு இணை​யதளத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. மத்​திய அரசின் சிஇஐஆர் என்ற இணை​யதளத்​தில், ரஞ்​சித் ஜாவுக்கு சொந்​த​மான செல்​போன் ஐஎம்இஐ எண்ணை தேடிய​போது, அது ஜம்​மு-​காஷ்மீரின் புல்​வா​மா​வில் உள்ள ஒரு நபர், வேறு ஒரு சிம் கார்டை போட்டு பயன்​படுத்​து​வது தெரிய​வந்​தது. போலீ​ஸார் உதவி​யுடன் இந்த சிஇஐஆர் இணை​யதளம் வெற்​றிகர​மாக செயல்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பாக காஸி​யா​பாத் போலீ​ஸார், புல்​வாமா நபரைத் தொடர்​பு​கொண்டு அது திருடப்​பட்ட செல்​போன் என்று தெரி​வித்​தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த நபர், புல்​வாமா போலீஸ் நிலை​யம் சென்று அந்த செல்​போனை கொடுத்​துள்​ளார். அப்​போது அது திருடப்​பட்ட அல்​லது தவற​விடப்​பட்ட செல்​போன்​தான் என்​பதை போலீ​ஸார் உறுதி செய்​துள்​ளனர். இதையடுத்து அங்​கிருந்து போலீ​ஸார் அதை கூரியர் மூலம் காஸி​யா​பாத்​தி​லுள்ள போலீஸ் நிலை​யத்​துக்கு அனுப்​பி​யுள்​ளனர். தற்​போது அந்த போன் வெற்​றிகர​மாக அதன் உரிமை​யாளர் ரஞ்​சித் ஜாவிடம் ஒப்​படைக்​கப்​பட்டு விட்​டது.

    இப்​படித்​தான் திருடு போன செல்​போன்​கள் மீட்​கப்​படு​கின்றன என்​றும், இதற்​காக சிஇஐஆர் இணை​யதளம் மிக​வும் உதவி​கர​மாக இருப்​ப​தாக​வும் போலீஸ் உயர் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார். இதற்​காக மத்​திய அரசின் தொலை​தொடர்​புத்​துறை அமைச்​சகம், சிஇஐஆர் இணை​யதளத்தை நடத்தி வரு​கிறது. மேலும் திருடு போன செல்​போன்​களை கண்​டறிய உதவுவதோடு, அந்த செல்​போன்​களை திருடர்​கள் பயன்​படுத்த விடா​மல் முடக்​க​வும் இந்த இணை​யதளம் உதவு​கிறது.

    கடந்த 2023-ம் ஆண்டு மே 16 முதல், 50 லட்​சத்​துக்​கும் அதி​க​மான செல்​போன்​கள் காணா​மல் போன​தாக சிஇஐஆர் இணை​யதளத்​துக்கு புகார்​கள் வந்​துள்​ளன. இந்த புகார்​களுக்​குப் பின்​னர் 19 லட்​சம் செல்​போன்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. மேலும் 31 லட்​சம் செல்​போன்​கள் முடக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் காணாமல் போன 4.22 லட்​சம் செல்​போன்​களை போலீ​ஸார் தேடு​கின்​றனர். டெல்​லி​யில் 4.6 லட்​சம், உத்​தரபிர தேசத்​தில் 1.1 லட்​சம், தெலங்​கா​னா​வில் 1.8 லட்​சம், கர்​நாட​கா​வில் 2 லட்​சம், ராஜஸ்​தானில் 65,368, ஆந்​தி​ரா​வில் 67,454, தமிழகத்​தில் 77,564, குஜ​ராத்​தில்​ 56,589 போன்​கள்​ கண்​டறியப்​பட்​டுள்​ளன என்​றும்​ அந்​த
    அ​தி​காரி தெரிவித்​தார்​.

  • ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

    புதுடெல்லி: ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

    இப்போது, ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

    அந்த பணிகளை செய்ய ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தகவல்தொழில்நுட்ப துறையைப் பொருத்தவரையில் பல்வேறு வேலைகளைச் செய்ய ஏஐ தொழில்நுட்பத்தை அவர்கள் அதிக அளவில் நம்பியுள்ளனர். இதனால், பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    தகவல்களை ஒழுங்கமைத்தல், ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் உள் ஆவணங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை கையாளக்கூடிய மென்பொருளை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பணிகள் மனித தலையீடு தேவையில்லாத மீண்டும் மீண்டும் ஒரே வேலைகளை கவனித்துக்கொள்வதாகும்.

    வேலையை மிகவும் திறமையாக்கும் புதிய ஏஐ தொழில்நுட்பங்களைச் சேர்க்க ஐபிஎம் அதன் குழுக்களை எவ்வாறு ஒழுங்கமைத்து வருகிறது என்பதற்கு இந்த பணிநீக்க அறிவிப்பு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

    குறிப்பாக, மனித வளங்கள் போன்ற பிரிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் சக்திவாய்ந்ததாக மாறி வருவதை ஐபிஎம் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

    இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கூறுகையில், ” சில வணிக செயல்முறைகளை மேம்படுத்தவும், குழுக்கள் மிகவும் திறமையாக செயல்படவும் ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்துள்ளது” என்றார்.

  • பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

    புதுடெல்லி: ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025″ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளாவிய சக்திவாய்ந்த தொழில்நுட்பம் கொண்ட 12 மையங்களில் பெங்களூருவும் அடங்கும். பெய்ஜிங், பாஸ்டன், லண்டன், நியூயார்க் மெட்ரோ, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, சியாட்டில், ஷாங்காய், சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் டொராண்டோ ஆகியவை பிற தொழில்நுட்ப சக்தி மையங்களாகும்.

    ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறமைவாய்ந்த சந்தையாக பெங்களூரு உள்ளது. அதன் தொழில்நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் , பெங்களூரு நகரம் உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முக்கிய மையமாக மாறியுள்ளது.

    HinduTamil28thMay
    HinduTamil28thMay

    javascript:false

    javascript:false

    28 யூனிகார்ன் நிறுவனங்களை உள்ளடக்கிய பெங்களூருவின் ஸ்டார்ட் அப் சூழல் சாதகமான வணிக விதிமுறை மற்றும் வலுவான நிறுவன ஆதரவிலிருந்து பெரிதும் பயனடைந்து வருவதாக அந்த அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

    புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ அடிப்படையில் உருவாக்கியுள்ளதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    பெர்பிளக்சிட்டி படைப்பாற்றல் மிக்க ஏஐ நிறுவனம். இதன் நிறுவனர் இந்தியரான அர்விந்த் ஸ்ரீநிவாஸ். இவரது நிறுவனம், விரைவில் காமட் என்ற அதன் சொந்த பிரவுசரை வெளியிட உள்ளது. இது, கூகுளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏஐ அடிப்படையில் இயங்கும் காமட், ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் தானியங்கி பணிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்ககூடியது. எனவே இது, இண்டர்நெட் பிரவுசிங் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது.

    ADVERTISEMENT

    HinduTamil28thMay
    HinduTamil28thMay

    பெர்பிளக்சிட்டி நிறுவனர் அர்விந்த் ஸ்ரீநிவாசனின் காமட் பிரவுசரை உருவாக்கும் திட்டத்தில், என்விடியா, சாப்ட்பேங், அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ், ஓபன் ஏஐ, மெட்டாவின் யான் லிகுன் போன்றவர்கள் பெரும் நம்பிக்கை வைத்து முதலீட்டை வாரி இறைத்துள்ளனர்.

    இவரது பெர்பிளக்சிட்டி நிறுவனம் ரூ. 4,400 கோடி நிதி திரட்டியதையடுத்து, அதன் ஸ்டார்ட்அப் மதிப்பு விரைவில் 14 பில்லியன் டாலரை அதாவது ரூ.1.2 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • உலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா 

    உலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா 

    tesla-to-start-building-cars-in-china-report
    டெஸ்லா எலக்ட்ரிக் கார் 

    சான்பிரான்சிஸ்கோ

    அமெரிக்காவிலிருந்து இயங்கி வரும் பிரபல எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா முதன்முதலாக வெளிநாட்டில் தனது எலெட்க்ட்ரிக் கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ சீனாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.

    அதன் முதல் வெளிநாட்டு உற்பத்திப் பிரிவான ஷாங்காயில் 2 பில்லியன் டாலர் செலவில் பிரம்மாணடமான ஒரு தொழிற்சாலையை உருவாக்கி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதன் மூலம் டெஸ்லா ஒவ்வொரு வாரமும் அதன் மாடல் 3 வகைகளில் 1,000 கார்களை சீன தொழிற்சாலையில் உருவாக்கும் எனவும், ஒருசில வாரங்களுக்குள் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, முக்கிய தொழில்நுட்ப தளமான டெக் கிரஞ்ச் கூறியுள்ளதாவது:

    சீன அரசின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது டெஸ்லா நிறுவனம். அதன் நிறுவனர் எலோன் மஸ்க்கின். சீனாவில் இந்தக் கார் உற்பத்தியை தற்செயலாக தொடங்கினாலும் உலகைப் பொறுத்தவரை இதுவே மிகப்பெரிய கார் சந்தையாகும்.

    முன்னதாக ஜூலை மாதத்தில், இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய காலாண்டு வருவாய் கடிதத்தில், மாடல் 3 எஸ் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஷாங்காய் தொழிற்சாலையில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது.

    நவம்பர் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்குவது டெல்ஸாவுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும், இது விற்பனையை தொடர்ந்து அதிகரிப்பதோடு கப்பல் மற்றும் கட்டணங்களுக்கான அதிக விலையையும் தவிர்க்க உதவும்.

    இவ்வாறு டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • அதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது 

    அதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது

    vivo-u20

    விவோ யு10 வரிசையில் அடுத்ததாக விவோ யு 20 மாடல் நவம்பர் 22 -ம் தேதி இந்திய சந்தைக்கு மிகவும் மலிவு விலையில் வரவுள்ளது. விவோ நிறுவனம் டீசர் வெளியிட்டது அதில் விவோ யு 20 யின் டிசைனில் பிளாஸ்டிக் பாடி மற்றும் அதற்க்கு மேல் கிரேடியண்ட் க்லாஸி டிசைன் என்று எப்பொழுதும் இருக்கின்ற டிசைன் போல் தான் இருக்கிறது.

    கடந்த மாதம் சீனாவில் விவோ யு 3 என்று ஒரு மாடல் அறிமுகமானது அது தான் இந்தியாவில் விவோ யு 20 என பெயர் மாற்றப்பட்டு வெளியாகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி விவோ நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    விவோ யு 3 – யின் சீன விலை

    4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு – ரூ. 10,000

    6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு – ரூ. 12,000

    விவோ யு 20 யின் இந்திய விலை: ( இந்தியாவில் இந்த விலைக்கு வர வாய்ப்புள்ளது)

    4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு – ரூ. 11,000 – 13,000

    6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு – ரூ. 14,000 – 16,000

    விவோ யு 20 – யின் சிறப்பம்சங்கள்: ( எதிர்பார்க்கப்படுபவை )

    டிஸ்பிளே:

    * 6.53 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள்

    * புல் எச்டி டிஸ்பிளே

    * டாட் நாட்ச் டிஸ்பிளே

    * திரை விகிதம் 19.5:9

    * பிங்கர்பிரிண்ட் சென்சார் பின்புறத்தில் இருக்கிறது

    செயலி:

    ஸ்னேப்ட்ராகன் 675 எஸ்ஓசி ப்ராசஸர், அல்டினோ 612 ஜிபியு

    பேட்டரி:

    * 5000-MAh ( விவோ இணையதளம் பக்கத்தில் 5000 MAh கொண்ட அதிவேக ஸ்மார்ட் போன் என்றும் இதில் அதிவேக ஸ்னேப்ட்ராகன் 675 எஸ்ஓசி உள்ளது எனவும் 273 மணிநேரம் சார்ஜ் தாங்கும் என்றும் அதில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் 21 மணிநேரமும், பேஸ்புக் பயன்பாட்டில் 17 மணிநேரமும், யூடியூப் பயன்பாட்டில் 11 மணிநேரமும் நீடிக்கும் என்று வெளியிட்டப்பட்டுள்ளது. )

    * 18 வாட் அதிவேக சார்ஜர்

    * டைப்- மைக்ரோ யுஎஸ்பி

    கேமராக்கள் :

    * பின்புற கேமராக்கள் – முதன்மை கேமரா 16 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் வைடு ஆங்கில் மற்றும் 2 மெகாபிக்சல் மாக்ரோ கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன.

    * முன்புறம் செல்ஃபி கேமரா – 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

    வண்ணங்கள்:

    நீலம் , சிவப்பு, மற்றும் கருப்பு

    வரவிருக்கும் விவோ யு 20 ஆனது விவோ யு 3 – யை விட சில மாற்றங்களுடனும் வர வாய்ப்புள்ளது. அது மட்டும் இல்லாமல் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மொபைல்களை வெளியிட்டு இந்தியாவில் வேறு பெயர் மாற்றி விடுவது இது புதிதல்ல.

    விவோ யு 20 ஒரு நல்ல பட்ஜேட் ஸ்மார்ட் போனாக இருக்கம் என்று எதிர்பாக்கப்படுகிறது. விவோ யு 20 நவ. 22 – ம் தேதி மதியம் 12 மணி அளவில் விவோ தளத்திலும் மற்றும் அமேசான் இணையதளத்தில் வெளியாகும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது.

  • அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்

    அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்

    putin-14

    தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற  இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின்.

    இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு (500 கோடி டாலர்கள்) கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.

    ரஷியாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், அதையும் மீறி  இத்தகைய ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நிகழ்வாக மாறியுள்ளது.

    இதற்கு அமெரிக்கா எத்தகைய  எதிர்வினையை ஆற்றப் போகிறது? என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இருப்பினும் இந்த விவகாரத்தால் அமெரிக்காவுடனான நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக அந்நாட்டுடன் பேசப் போவதாக ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    19-ஆவது இந்திய – ரஷிய வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக விளாதிமிர் புதின் தில்லிக்கு வியாழக்கிழமை வந்தார். அவருடன்  ரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ், தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் உள்ளிட்டோரும் வந்தனர்.

    மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி – புதின் இடையேயான சந்திப்பு தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சர்வதேச அளவில் பல விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

    8 ஒப்பந்தங்கள் கையெழுத்து: அதன் பின்னர் 8 முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. அவற்றில் முக்கியமானது எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணை கொள்முதல் தொடர்பான உடன்படிக்கையாகும். அந்த வகை ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் இடையே பல மாதங்களாக நீடித்து வந்தது. அதில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதுமட்டுமன்றி “ககன்யான்’ திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அத்திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் ஃபெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி ஆஃப் ரஷியாவும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இவை தவிர, ரயில்வே மேம்பாடு, பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே கையெழுத்தாகின. மேலும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக கொச்சி கப்பல் கட்டும் தளம் மற்றும் ரஷியாவின் ஒருங்கிணைந்த கப்பல் கட்டுமான கழகத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    பயங்கரவாத ஒழிப்பு: இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், பயங்கரவாதத்தை வேரறுப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தியிருந்தனர். எல்லை தாண்டி வந்து பிற நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றும் சம்பவங்கள் குறித்து அந்த அறிக்கை வாயிலாக கவலை தெரிவித்த இரு நாட்டு தலைவர்களும், அத்தகைய செயல்களை முற்றிலுமாக தடுப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி கூறுகையில், “பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து அழித்தொழிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஒரே நிலைப்பாடுதான் உள்ளது; அந்த இலக்கை நோக்கி இரு நாடுகளும் செயல்படும்” என்றார். அதே கருத்தை ரஷிய அதிபர் புதினும் வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கு அழைப்பு: இதனிடையே, தில்லியில் நடைபெற்ற இரு நாட்டு வர்த்தக மாநாட்டில் பேசிய மோடி, இந்தியாவில் ராணுவத் தளவாட தொழிற்பூங்காவை அமைக்குமாறு ரஷியாவுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கான வாய்ப்புகளும், சூழல்களும் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

    அமெரிக்கா கருத்து

    இந்தியா  – ரஷியா இடையேயான ஒப்பந்தம் குறித்து  அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ரஷியாவின் தவறான செயல்பாடுகளால்தான் அந்நாட்டின் மீது அமெரிக்கா தடை விதித்தது. மாறாக, அதன் மூலம் தோழமை நாடுகளைப் பழிவாங்குவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் நட்பு நாடுகளுக்கு விலக்கு அளிப்பதற்கு சில வரையறைகள் உள்ளன.  எனவே, இந்த விவகாரத்தைப் பொருத்தவரை முன்கூட்டியே எந்த விதமான முடிவுக்கும் வரத் தேவையில்லை என்றார் அவர்.

    “எஸ்-400 டிரையம்ப்’ ஏவுகணை சிறப்பம்சங்கள்

    எஸ்-400 “டிரையம்ப்’  ஏவுகணையானது தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எதிரி நாடுகளின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை இதன் மூலம் அழித்தொழிக்க முடியும். சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 72 எஸ்-400 ஏவுகணைகளை விண்ணில் செலுத்த முடியும். அதேபோன்று ஒரே நேரத்தில் அதன் மூலம் அதிகபட்சம் 36 இலக்குகளைத் தாக்க இயலும்.

  • சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

    சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

    nobel

    போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும்  பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஜிதி இனப் பெண் நாடியா முராடுக்கும் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வெள்ளிக்கிழமை அறிவித்து, நோபல் தேர்வுக் குழு தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்ஸன் கூறியதாவது:

    உலகம் முழுவதும், போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒரு போர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த அவலத்துக்கு முடிவு கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும், மருத்துவர் முக்வேஜேவுக்கும், நாடியா முராடுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

    எந்தச் சூழலிலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான், உலகில் உண்மையான அமைதியை எட்ட முடியும் என்றார் அவர்.

    பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக நிகழாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெனிஸ் முக்வேஜே (63)

    மருத்துவப் பட்டம் பெற்றுள்ள முக்வேஜே, பெண்களுக்கான சிறப்பு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். கடந்த 1998 முதல் 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 2-ஆவது காங்கோ போரின்போது கிளர்ச்சிப் படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்தவர் இவர்.

    நாடியா முராட் (25)

    இராக்கில், யாஜிதி இனத்தவர் வசிக்கும் சிஞ்சார் மலைப்பகுதியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றுகையிட்டபோது, பயங்கரவாதிகளால் நாடியா கடத்தப்பட்டார். அதன் பிறகு 3 மாதங்கள் அவர்களிடம் பாலியல் அடிமையாக இருந்த அவர், பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்து பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது பணிகளால் ஈர்க்கப்பட்ட ஐ.நா. போதைப் பொருள்கள் மற்றும் குற்றப் பிரிவு (யுஎன்ஓடிசி), நாடியாவை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லெண்ணத் தூதராக 2016-ஆம் ஆண்டு நியமித்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது போராட்டம் குறித்து நாடியா எழுதிய “தி லாஸ்ட் கேர்ள்’ என்ற புத்தகம் 2017-ஆம் ஆண்டு வெளியானது.

  • தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    rains-7

    சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்,  புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் விரட்டி வந்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை,  தி.நகர், ராயப்பேட்டை, மந்தைவெளி, போரூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், கொளத்தூரிலும் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    ஐந்து நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முதல் கனழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம், திருள்ளூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ளும் படியும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.

    கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி மடுகரை, வில்லியனூர், மதகடிகப்பட்டு, தவளகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோன்று கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7-ஆம் தேதி வரை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6-ஆம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை

    ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை

    putin

    ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

    புதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு ரூ.36,792 கோடியாகும். இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும். ஏனெனில், இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். இதனை வாங்க சீனா கடந்த 2014-ஆம் ஆண்டே ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுவிட்டது.

    இது தவிர, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கியமாக, ரஷியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்; ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் விதமாக புதினின் இந்தப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதின் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்திய-ரஷிய தொழிலதிபர்கள் கூட்டத்திலும் புதின் பங்கேற்கிறார்.

    இதற்கிடையே, இந்தியாவும், ரஷியாவும் இணைந்து நவம்பர் 18 முதல் 28 வரையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரஷிய ராணுவத்தின் கிழக்கு மாவட்டப் பிரிவு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த 250 வீரர்கள் இந்தியாவுடனான பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம், பாபினா நகருக்கு அருகேயுள்ள பயிற்சி மைதானத்தில் இருநாட்டு கூட்டு ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.