இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 73.34 ரூபாயாக வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், இந்தியப் பங்குச் சந்தையும் பெரும் சரிவை சந்தித்தது.
அந்நிய முதலீடு குறைந்து வருவதும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாகும்.
கடந்த சில மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.
வர்த்தக நிபுணர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1,550 கோடியை திரும்பப் பெற்றுவிட்டனர். இதன்காரணமாக, பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்தது. இதேபோல், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 150 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது’ என்றார்.