What’s New

1) Passport 

No Need of Passport NOC for Government Employees

PASSPORT NOC Application form for Government Servant

2) விரைவில் 5G

 தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் 5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1  டி.பி.பி.எஸ்., (1 Tbps) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின்  5ஜி இன்னோவேசன் மையத்தை (5G Innovation Center) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., அளவுக்கு இன்டர்நெட் வேகத்தை உயர்த்தும் புதிய முயற்சியை செய்து  அதில் வெற்றி கண்டுள்ளனர். இது தற்போதுள்ள வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம்.

 இந்த வேகத்தின் மூலம் ஒரு திரைப்படத்தை 3 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது 4ஜி வேகத்தைவிட சுமார் 65,000 மடங்கு  வேகமானது. இதற்கு முன்பு அதிக வேகமாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 5ஜி இன்டர்நெட் வேகம் 7.5 ஜி.பி.பி.எஸ் என்ற அளவில்  இருந்தது. இந்த தொழில்நுட்பம் 2018ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

4) Yahoo mail புதிய வசதி

யாஹு மெயில் பழையதாக இருக்கலாம் ஆனால் இன்னும் பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது யாஹு மெயில் பயனாளிகளுக்குப் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

யாஹூவில் இருந்து மெயில் அனுப்பும்போது அந்த மெயிலில் ஒளிப்படம், வீடியோ மற்றும் ஜிப்க்ளை எளிதாகச் சேர்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. மெயிலை உருவாக்கும்போது கம்போஸ் பெட்டிக்குக் கீழே உள்ள + குறியை கிளிக் செய்தால் ஒளிப்பட ஆல்பம் போன்றவற்றை நேரடியாகப் பயன்படுத்தலாம்.

கோப்புகள் மற்றும் இணைப்புகளையும் இதன் மூலம் அணுகலாம். மேலும் பயனாளிகள் தாங்கள் அனுப்பிய அல்லது வரப்பெற்ற ஒளிப்படங்களைத் தேதி அடிப்படையில் பார்க்கவும் செய்யலாம்.

அதே போல் ஜிப்களைத் தேடிப்பார்த்து அனுப்பும் வசதியும் இருக்கிறது.

5) 14 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த 61 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள்

உலகிலேயே கடந்த 14 ஆண்டுகளில் 61 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், இதே காலங்களில் சீனாவிலிருந்து 91 ஆயிரம் பேர் இடர்பெயர்ந்துள்ளதாக நியூ வேல்ட் வெல்த் மற்றும் எல்.ஐ.ஓ குளோபல் நிறுவனங்கள் நடத்தி உள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000-2014ம் ஆண்டுகளில் அதிகபட்சமான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியேறிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் 21 ஆயிரம் பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

வரி, பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் வெளிநாட்டில் குடியேறி உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு வெளியேறி உள்ளனர்.

சீனர்கள் பெரும்பாலானவர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.

உலக அளவில் கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 1.25 லட்சம் பேர் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் 42 ஆயிரம் பேர், இத்தாலியில் 23 ஆயிரம் பேர், ரஷ்யாவில் 20 ஆயிரம் பேர், இந்தோனேஷியாவில் 12 ஆயிரம், தென் ஆப்பிரிக்காவில் 8 ஆயிரம் பேர், எகிப்தில் 7 ஆயிரம் பேரும் இடம் பெயர்ந்துள்ளனர்.

முதலிடத்தில் சீனா, இராண்டாவது இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.