Yahoo mail புதிய வசதி

யாஹு மெயில் பழையதாக இருக்கலாம் ஆனால் இன்னும் பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது யாஹு மெயில் பயனாளிகளுக்குப் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
யாஹூவில் இருந்து மெயில் அனுப்பும்போது அந்த மெயிலில் ஒளிப்படம், வீடியோ மற்றும் ஜிப்க்ளை எளிதாகச் சேர்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. மெயிலை உருவாக்கும்போது கம்போஸ் பெட்டிக்குக் கீழே உள்ள + குறியை கிளிக் செய்தால் ஒளிப்பட ஆல்பம் போன்றவற்றை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
கோப்புகள் மற்றும் இணைப்புகளையும் இதன் மூலம் அணுகலாம். மேலும் பயனாளிகள் தாங்கள் அனுப்பிய அல்லது வரப்பெற்ற ஒளிப்படங்களைத் தேதி அடிப்படையில் பார்க்கவும் செய்யலாம்.
அதே போல் ஜிப்களைத் தேடிப்பார்த்து அனுப்பும் வசதியும் இருக்கிறது.