3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம்

3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம்

Niken

 

இருசக்கர வாகன விற்பனையில் முதன்மையாகத் திகழும் யமஹா நிறுவனமாகத் திகழும் யமஹா, தற்போது புதிய கண்டுபிடிப்புடன் களமிறங்கியுள்ளது. இளைஞர்களின் பெரும் ஆதரவு பெற்ற யமஹா நிறுனத்தின் பைக்குகள் தான் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமிக்கின்றன. இவை ஆர்எக்ஸ் 100-ல் தொடங்கி தற்போது உள்ள ஆர்15 வரை பொருந்தும்.

 இதே வேளையில் ப்ரீமியம் வகைகளிலும் பலதரப்பட்ட விதமான பைக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இருசக்கர வாகனத்திலேயே பெரும் புரட்சியையும் ஏற்படுத்திவிட்டது. 3 சக்கரங்களுடன் கூடிய ‘நிகேன்’ எனும் புதிய வகை பைக்கை யமஹா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பொதுவாக இதுபோன்ற 3-ஆவது சக்கரம் பின்பகுதியிலேயே அதிகம் காணப்படும். ஆனால், யமஹா நிறுவனம் சற்றே புதிய முயற்சியாக அதை முன்பக்கம் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது. இவ்வகை பைக்குகள் ரூ.11 லட்சம் முதல் விற்பனைக்கு வருகின்றன.