7-வது ஊதியக் குழு அறிக்கை விரைவில் தாக்கல்

7-வது ஊதியக் குழு அறிக்கை விரைவில் தாக்கல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

48 லட்சம் ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பெறப் போகும் தொகையை நிர்ணயிக்கும் இந்த அறிக்கை தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7-வது சம்பளக் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை ஏற்பது குறித்து அதன்பின்னர் மத்திய அரசு முடிவு செய்யும்.