7வது சம்பள கமிஷனுக்கு மேலும் 4 மாத அவகாசம் நீட்டிப்பு!
7வது சம்பள கமிஷனுக்கு மேலும் 4 மாத அவகாசம் நீட்டிப்பு!
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனுக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கமிஷன் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அதன்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை மாற்றி அமைப்பது தொடர்பான பரைந்துரைகளை எடுத்துரைக்கும். ஆனால், இந்தக் குழுவினர் இதுவரை அதன் பரிந்துரையை செய்யவில்லை.
இந்நிலையில், பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 7-வது ஊதிய கமிஷனுக்கு நான்கு மாத கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே, இதுகுறித்து நீதிபதி ஏ.கே.மாத்தூர் கூறுகையில், 7வது சம்பள கமிஷன் அறிக்கையை இறுதி செய்யும் பணியில் எங்களது குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அறிக்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) தாக்கல் செய்யப்படும்.
மேலும், எங்களது கமிஷனின் பரிந்துரைகள் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது” என்றார்.