வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்’ என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது: சான்றிதழ் தேவைப்படுவோர், சான்றிதழ் காணாமல் போனதற்கு அடையாளமாக, போலீசில் புகார் அளித்து, ஒப்புதல் சான்று பெற வேண்டும். மேலும், பகுதி கவுன்சிலரிடமும் சான்றிதழ் பெற வேண்டும். இந்த இரண்டையும் இணைத்து, 14ம் தேதிக்கு பின், சென்னைப் பல்கலை தேர்வுத் துறைக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.சென்னைப் பல்கலையின் தேர்வுகள், 12ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.