வங்கிகளில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்… பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு

வங்கிகளில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்… பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு

Published on : 23rd April 2018 12:59 PM  |   அ+அ அ-   |  

banks

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 158 கிரெடிட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 158

பணி: Officer (Credit)

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 72 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 21 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 28 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், வணிகவியல், அறிவியல், பொருளாதாரவியல் சார்ந்த துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐசிடபுள்யுஏ., கம்பெனி செகரட்டரி படித்தவர்கள், எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofindia.co.in/pdf/BOIADVT-PROJECTNO-%202018-19-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பரோடா வங்கியில் சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணி: 
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் காலியாக உள்ள 424 மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தரத்திலான சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: MSME-Sales/Relationship Management (SMG/S IV): – 25
பணி: MSME-Sales/Relationship management (MMG/S III): – 59
பணி: MSME-Monitoring/Processing of Loans (SMG/S IV): – 75
பணி: MSME-Monitoring Processing of Loans (MMG/S III): – 62
பணி: Finance/ Credit (MMG/S III): 100
பணி: Finance/Credit (MMG/S II): 40

வயதுவரம்பு: 6.5.2018 தேதியின்படி 23 முதல் 40க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 45 வயதுடையவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Wealth-Management.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மாகோ வங்கியில் கிளார்க் வேலை

மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மாகோ வங்கியில் காலியாக உள்ள 8 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: மும்பை

பணி: கிளார்க்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும், ஆங்கிலம் மற்றும் மராத்தியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600 + ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி, என்டி பிரிவினர் ரூ.350 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

விலாசம்: Maco Bank, Manora Aamdar Niwas, Free Press Journal Marg, Nariman Point, Mumbai – 400 021.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.macobank.com/UploadDocument/MACO-BANK-Advertisement-Apr-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இந்தியன் வங்கியில் 145 அதிகாரி வேலை 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 145

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Specialist Officers
துறை: Information Technology Department / Digital Banking Department
1. Assistant General Manager – 01
2. Chief Manager – 09
3. Manager -13
4. Senior Manager -08
துறை: Information Systems Security Cell
1. Assistant Manager – 01
2. Manager – 05
3. Senior Manager – 01
துறை: Treasury Department
1. Manager – 02
2. Senior Manager – 11
துறை: Treasury Department
1. Manager – 04
2. Senior Manager – 03
துறை: Security Department
1. Manager – 55
2. Senior Manager – 20
துறை: Planning and Development Department
1. Manager  – 01
2. Assistant Manager – 01
துறை: Premises and Expenditure Department
1. Manager – 04
2. Assistant Manager – 07
சம்பளம்: மாதம் ரூ.23,700 – 66,070

தகுதி: கணினி அறிவியல், கணினி அப்ளிகேசன், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன்ஸ், எல்க்ட்ரானிக்ஸ் இன்ஸ்ருமென்டேசன் போன்ற துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 20 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 45 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மிகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்திருந்தால் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/SOENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எக்ஸிம் வங்கியில் நிர்வாக அதிகாரி வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2018-19-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 05

பணி: Administrative Officer  – 05

தகுதி: ஏதாவதொரு 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 40க்குள்ளும், ஒபிசி பிரிவினர் 43க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23700 – 980-30560 – 1145 – 32850 – 1310 – 42020.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.600. மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் தகவர் அறியும் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2018

மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/2018/Exim%20AO.pdf என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

சிண்டிகேட் வங்கியில் நிறுவன செயலாளர் வேலை

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள நிறுவனச் செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: உடுப்பி
பணி: Company Secretary – 01
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager, Syndicate Bank, Manipal – 576 104. Udupi District. Karnataka State (India).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2018
மேலும் விவரங்கள் அறிய https://www.syndicatebank.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

விஜயா வங்கியில் வேலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 57 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இஞைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 57
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager in Law – 32
பணி: Manager in Security – 21
பணி: Manager in Accountant – 04
பணி: Clerk (Sports Men) – 10
சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். சம்மந்தபட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ, பிஎல் (எல்எல்பி) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட துறை பணியிடங்களுக்கும், கிளார்க் பணியிடங்களுக்கு +2 முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2018
மேலும் பணி அனுபவம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.vijayabank.com/images/fckimg/file/Recruitment/Sports/Advertisement%20Sports%20%20New.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.