முடங்கிய Whatsapp : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதறிய நெட்டிசன்கள்

04/11/2017 : முடங்கிய வாட்ஸ் அப்: ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதறிய நெட்டிசன்கள்

வாட்ஸ் அப் சமூக வலைதளம் இன்று (நவம்பர் 3) மதியம் 5 நிமிடங்கள் இயங்கவில்லை. இந்தியாவிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவலாக வாட்ஸ் அப் சேவை முடங்கியது.

இதனையடுத்து, நெட்டிசன்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற மற்ற சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் இயங்கவில்லை என்ற தகவலை பதிவு செய்யத் தொடங்கினர்.
வாட்ஸ் அப் பிரச்சினை குறித்து #whatsappdown என்ற ஹேஷ்டேக் கீழ் மக்கள் தகவல்களைப் பகிர் ஆரம்பித்தனர். இதனால், #whatsappdown ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆனது.

இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், சர்வர் செயலிழந்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூகமும் சமூக வலைதளங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த இந்த காலகட்டத்தில் 5 நிமிட வாட்ஸ் அப் முடக்கம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.