மிதக்கிறது தலைநகர்: உதவி, மீட்பு பணி Update news
வரலாறு காணாத கனமழை.. மிதக்கிறது தலைநகர்: உதவி, மீட்பு பணி Update news
சென்னை : வரலாறு காணாத மழையால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடையாறு,சைதாப்பேட்டை,தாம்பரம்,முடிச்சூர் என்று நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.அத்தியாவசிய உணவுப் பொருட்களான பால்,பிரெட் கூட கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் தவித்து வருகின்றனர்.
கனமழை updates
மதியம் மணி 12.00 – (02/12/15)
* கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டை பாலத்தை தாண்டி ஓடுகிறது வெள்ள நீர். பாதுகாப்பு கருத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
* ரயில்வே உதவி எண்
ரயில்கள் ரத்து குறித்து அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* சென்னை சென்ட்ரல் – 044 – 25330714, சென்னை எழும்பூர் – 044- 28190216
காலை மணி 11.35 – (02/12/15)
* கடற்படை கப்பல் விரைகிறது
* சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிக்கு உதவ ஐ.என்.எஸ். ஏரவத் கப்பல் விரைகிறது.
* 5 ஜாமினி படகுகள், 20 நீச்சல்வீரர்கள், நிவாரண பொருட்களுடன் கப்பல் மாலை சென்னை வருகிறது
காலை மணி 11.20 – (02/12/15)
* பிரதமர் மோடி ஆலோசனை.
*தமிழக மழை, வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
திருவண்ணாமலை; வந்தவாசியை அடுத்த வழூர் பெரிய ஏரியில் உபரிநீர் வெளியேறுகிறது
* சென்னை விமான நிலையம் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.ள்ளம்
காலை மணி 10.00 – (02/12/15)
* சென்னையில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ராணுவம் மற்றும் கடற்படை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் 6 குழுக்கள் வரவழைக்கப்பட உள்ளன.
* சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தவிக்கும் மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க ஒவ்வொரு பகுதிக்கும் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் – 9445190001, மணலி – 9445190002; தேனாம்பேட்டை – 9445190009, மாதவரம் – 9445190003, ஆலந்தூர் – 9445190012,அடையாறு – 9445190013, அண்ணாநகர் – 9445190008, ராணுவம் – 98402951003, வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை – 044-28593990, 28410577, 9445869843, 9445869847ன்னை
காலை மணி 9.45 – (02/12/15)
சென்னை நகரில் பெய்து வரும் கனமழையால் நகரமே தண்ணீரில் மிதக்கின்றது. பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நீரில் சிக்கியவர்களை மீட்க, மீட்புக்குழுவினருடன் இணைந்து ராணுவத்தினரும், கப்பற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
* இந்நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
* கனமழை காரணமாக, சென்னையில் மூன்று இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* வடகிழக்கு பருவமழை காரணமாக வரும் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்தத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சைதாப்பேட்டை பாலம்
* சென்னை எழும்பூரிலிருந்து புறப்படவேண்டிய 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-குருவாயூர் ரயில், புவனேஸ்வர்-புதுச்சேரி ரயில் ஆகிய ரயில்கள் இன்று மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. மேலும் பல ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே துறையினர், அவ்வாறு ரத்தாகும் பட்சத்தில் பயணிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
* சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய, வரவேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ஓடுபாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக காலை 10 மணி வரையிலான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.