பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன? இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது!

பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன? இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது!

im12

தற்போது பலரின்  மனதில் இருக்கும் ஒரே கேள்வி,  எப்போது பெட்ரோல், டீசல் விலை பழைய நிலைக்குத் திரும்பும் என்பதுதான். அந்த அளவுக்கு வாகனப் பயன்பாட்டுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். பெட்ரோலிய பொருள்கள் இல்லை என்றால் துரும்பும்  நகராது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றில் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசலின்  தேவையும், விலையும், அதனால் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது.  தற்போதுதான் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

விஞ்ஞான   வளர்ச்சி அதிகரித்து வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என சாமானியன் முதல் சாதனை படைத்தவர்கள் வரை யோசித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஏர்பாட்’ என்ற நிறுவனம் காற்றில் செல்லக் கூடிய காரைத் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

பலூனில் காற்றை அடைத்து ஊசியால் உடைத்தால் எப்படி காற்று வேகமாக வெளியேறுகிறதோ, அதே போல் உயர் அழுத்த காற்றை அடைத்து அதை வெளியேற்றி அதன் மூலம் கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தி இந்தக் கார் இயக்கப்படுகிறது.

காற்றை  உயர் அழுத்த நிலையில் இந்த  ஏர்பாட் கார்களுக்கு நிரப்பினால் போதும், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு முறை காற்றை நிரப்பினால் 160 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இந்தக் கார்களுக்கு தனியாக ஏ.சி. தேவையில்லை. ஏனென்றால், உயர் அழுத்த காற்றின் மூலம் கார்களில் தானாக குளிச்சி ஏற்படும்.

ஏர்பாட் கார்களின் விலை சுமார் ரூ.7 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் காற்றில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.