புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

rain

புதிய மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
கிழக்கு மத்திய அரபிக்கடலில் கர்நாடகா-வடகேரளா இடையே புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் 11 செ.மீ., மழையும், நாமக்கல் திருச்செங்கோட்டில் 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.