நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

2017-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) எப்போது நிகழ உள்ளது? சனி பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? மாற்றம் அடைவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 – சாலிவாகன சகாப்தம் 1939 – பசலி 1427 – கொல்லம் 1193-ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 19.12..2017 சுக்ல ப்ரதமையும் செவ்வாய்க்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு – காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

எத்தனை வருடம் தனுசு ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்……
தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி – 28.03.2020 – சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார்.

தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் – ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் – பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார்.

சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – கடகம் – சிம்மம் – துலாம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கும்பம் – மீனம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் – மிதுனம் – கன்னி – விருச்சிகம் – தனுசு – மகரம்