நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்

புதுடில்லி : நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த போலி பல்கலை.,களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. போலியானவை என தெரியாமல் மாணவர்கள் பணம் செலுத்தி தவிப்பதை தவிர்க்கவும், இந்தப் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றால் அது செல்லாது என்பதாலும் இந்தப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் 24 பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. இவற்றில் 8 பல்கலைக் கழகங்கள் டில்லியிலும், 7 பல்கலைக் கழகங்கள் உத்தரப்பிரதேசத்திலும் உள்ளன. புதுச்சேரி, அலிகர், பீகார், ரோர்கேலா, ஒடிசா, கான்பூர், மதுரா, பிரதாப்கர், நாக்பூர், கேரளா, கர்நாடகா ஆகியோவற்றில் தலா ஒரு பல்கலை.,யும், அலகாபாத்தில் 2 பல்கலை.,களும் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.