தொடர்ந்து A/C அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள் ? எலும்பு தேயக்கூடும்! கவனம் தேவை.
தொடர்ந்து ஏசி அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள் ? எலும்பு தேயக்கூடும்! கவனம் தேவை.

இன்றில் நம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இருப்பதில்லை.வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் நாம் அங்கே ஏ.சி அறையில் உட்கார்ந்து வேலை பார்க்கிறோம்.பின்னர் வீட்டுக்கு வந்ததும் மீண்டும் ஏசி அறையில் உறங்குகிறோம்.
இவ்வாறு ஏசி அறையில் அதிக நேரத்தை செலவழித்தால் எலும்பு தேயும் ஆபத்து இருப்பதாக அண்மைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
எலும்பு தேய ஆரம்பிக்கும் போது,எந்த அறிகுறியும் தென்படாது.எலும்பு முழுவதும் தேய்வு அடைந்தபிறகுதான் அதற்கான அறிகுறிகள் கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
உடல் களைப்பு மற்றும் வலி, சிறிய அளவில் அடிபடுவதன் காரணமாக இடும்பு எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் முறிவு (Fracture) ஏற்படுதல் ஆகியன எலும்பு தேய்ந்து போனதற்கான அறிகுறிகள் ஆகும்.
எலும்புத் தேய்வு பாதிப்பு வருவதைத் தடுக்க முடியும். ஆனால், முழுமையாக குணப்படுத்த முடியாது.