தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.24) மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நீடிக்கிறது.
இதன் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.