தினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர்

தினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர்
cell_phone

நமது கையடக்க செல்போனால் உலகமே உள்ளங்கையில் அடங்கிவிட்டது என்பதை யாருமே மறுக்க முடியாதுதான். ஆனால்.. அது செய்யும் மறைமுக எதிர்வினைகளை இன்னமும் மக்கள் முழுமையாக உணரவில்லை.

செல்போனின் எதிர்வினையால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் தங்களது இன்னுயிரை விலையாகக் கொடுத்து வருகிறார்கள்.

இது குறித்து மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரிஷ் குமார் கூறியதாவது, சமீபத்தில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களுடன் நான் நடத்திய கலந்தாலோசனையில் கடந்த சில ஆண்டுகளாக செவிட்டுத் தன்மையும், மூளையில் புற்றுநோய்க் கட்டிகளும் அதிகமானோரை பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, தினமும் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்கள் செல்போனில் பேசினால் அதனால் காதுகளில் வெப்பம் அதிகரிக்கிறது. அதாவது செல்போனில் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சு காரணமாக காது மடல்களை வெப்பமாக்கி, அங்கிருக்கும் ரத்தத்தையும் சூடாக்குகிறது. இதனால் நமது உடலும் வெப்பமாகி, 98 பாரன்ஹீட்டில் இருக்க வேண்டிய உடலின் வெப்பம் சில சமயங்களில் 100.2 பாரன்ஹீட் வரை செல்கிறது.

இது மட்டுமில்லை, செல்போன் டவர்களின் அருகாமையில் வசிப்பதும், வை-ஃபை கதிர்வீச்சும் மூளைக் கட்டிகளுக்கு மிக முக்கியமான காரணங்களாக அமைகின்றன. கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்தியாவில் மூளைக் கட்டிகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஒரு விஷயம் என்னவென்றால், தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர்ந்து செல்போனில் பேசினால் 10 ஆண்டுகளுக்குள் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.