சென்னையில் மீண்டும் படகு சேவை துவக்கம்: படகு உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னையில் மீண்டும் படகு சேவை துவக்கம்: படகு உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வுப்பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தாழ்வு பகுதிகளில் உள்ள  மக்களை வெளியேற்றும் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரங்களில் பெய்த கனமழையின்போது இயக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சேவை இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

படகு சேவை தேவைப்படும் மக்கள்,

என்டிஎல் படகு சர்வீஸ்-7708068600

 ஓலா – 7708068600 போன்றவற்றை அணுகலாம்.

ராயபுரத்திலுள்ளோர்  9445190005,

திருவிக நகர் பகுதிக்கு  9445190006,

அம்பத்தூர் பகுதிக்கு 9445190007,

அண்ணா நகருக்கு 9445190008,

தேனாம்பேட்டை 9445190009,

ஆலந்தூர் 9445190012 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு படகு உதவியை நாடலாம்.