கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

cyclone
 வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி அருகே ஓகி புயல் சின்னமாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் இந்த ஓகி புயல் சின்னமானது, நிலப்பரப்பில் கரையைக் கடக்கும் வாய்ப்பு இல்லை. இது கடற்பரப்பிலேயே சுழன்று மழையைப் பெய்து வலுவிழக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதே சமயம், சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கன்னியாகுமரியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சூறாவளிக் காற்றின் காரணமாக கன்னியாகுமரியில் மரங்கள் முறிந்து விழுவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.