உலகின் சிறிய போன்!

உலகின் சிறிய போன்!

‘ஜேன்கோ டைனி டி1’ என்பதுதான் உலகின் சிறிய செல்போன். உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய இதன் எடை வெறும் 13 கிராம்தான். ஆனால், செல்போனுக்கான எல்லா அம்சங்களும் கொண்டது. 200 எம்.ஏ.எச். பேட்டரி முதல் புளூடூத் வசதிவரை இருக்கிறது. யூ.எஸ்.பியும் பொருத்திக்கொள்ளலாம். நானோ சிம் பயன்படுத்தலாம். 50 குறுஞ்செய்திவரை சேமிக்கலாம். தொழில்நுட்ப எல்லைகளை விரிவாக்கி காட்டுவதற்காக ஜினி மொபைல் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்தச் சின்னஞ்சிறிய போனை பேக்கிங்கிலிருந்து பிரிப்பதில் தொடங்கி அதைப் பயன்படுத்தும் வழியை யூடியூப் வீடியோவில் பார்க்கலாம்.

 மேலும் தகவலுக்கு: https://worldssmallestphone.com/