உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய்

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமித்து, கடந்த 3-ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகோய் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வரை, 13 மாதங்கள் ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.