அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும்?

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும்?
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும்?

சென்னை, அக். 14–

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே போல் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போதெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனே அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு அறிவித்து வருகிறது.

அதன்படி மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கான கோப்புகளில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று கையெழுத்திட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே இதை நடைமுறைப்படுத்தும் வகையில் இன்று அல்லது நாளை அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதும், அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது