அனைத்து E-Mail களையும் Windows Live Mail வாயிலாக நம்முடைய கையெழுத்துடன் செல்லுமாறு உருவாக்கமுடியும்

அனைத்து மின்னஞ்சல்களிலும் Windows Live Mail வாயிலாக  நம்முடைய கையெழுத்துடன் செல்லுமாறு உருவாக்கமுடியும்

இதற்காக முதலில் விண்டோ லிவ்மெயிலை திரையில் தோன்றிட செய்க பின்னர் திரையின் மேலே இடதுபுறமுள்ள அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது விசைப்பலகையிலுள்ள Alt + F ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் கீழிறங்கு பட்டியொன்று திரையில் விரியும் அதில் முதலில்    Options என்பதையும் பின்னர் Mail.என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக  உடன் Options எனும் சாளரம் திரையில் தோன்றிடும்  அதில் மேல்பகுதியில் Signatures எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் Signatures எனும் தாவிபொத்தானின் திரையில் எந்த செய்திகளில் நம்முடைய கையெழுத்துடன் சேர்த்து அனுப்ப விரும்புகின்றோம் என்பதற்கான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க பின்னர் New என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக  அதன்பின்னர் நம்முடைய கையெழுத்தை அதில் உருவாக்கிடுக பின்னர் advanced எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர்  மீண்டும்New என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக  அதன்பின்னர் நம்முடைய கையெழுத்தை அதில் உருவாக்கிடுக

பிறகு  Default எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் இறுதியாக apply எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துஇந்த பணியை முடிவிற்கு கொன்டுவருக இதன்பின்னர்  மின்னஞ்சலை புதியதாக உருவாக்கிடும்போது  நம்முடைய கையெழுத்தானது இயல்புநிலையில் தானாகவே ஒவ்வொரு மின்னஞ்சலிலும் சேர்ந்துவிடும்  ஒரே மின்னஞ்சல் சேவை வழங்குனரிடம் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்திருந்தால் அவையனைத்தையும் இந்த விண்டோ லிவ்மெயிலின் உள்வருகை பெட்டியை திறந்துகொண்டு  மேலே இடதுபுறமூலையில் இருக்கும்  அம்புக்குறியை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் options என்பதையும் அதன்பின்னர் விரியும் திரையில் தேவையான மின்னஞ்சல் கணக்குகளையும் தெரிவுசெய்துகொண்டு ஒரேசமயத்தில் திறந்த பார்வையிடுக.