Articles Posted in the " Recent News " Category

  • அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்

    அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்

    அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற  இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின். இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு (500 கோடி டாலர்கள்) கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது. ரஷியாவுடன் […]


  • சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

    சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

    சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும்  பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஜிதி இனப் பெண் நாடியா முராடுக்கும் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வெள்ளிக்கிழமை அறிவித்து, நோபல் தேர்வுக் குழு தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்ஸன் […]


  • தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்,  புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் விரட்டி வந்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம், […]


  • ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை

    ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை

    ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. புதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று […]


  • இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

    இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

    இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 73.34 ரூபாயாக வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், இந்தியப் பங்குச் சந்தையும் பெரும் சரிவை சந்தித்தது. அந்நிய முதலீடு குறைந்து வருவதும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும்  ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாகும். கடந்த சில மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை […]


  • 03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

    03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

    தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி         லட்சத்தீவு பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கி, முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. இந்த 4 மாதங்களில் […]


  • UGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை?  இணையதளத்தில் இன்று வெளியீடு

    UGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை? இணையதளத்தில் இன்று வெளியீடு

    அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை?: யுஜிசி இணையதளத்தில் இன்று வெளியீடு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில், எந்தந்தப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் உள்ளது என்ற விவரம் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களை யுஜிசி-யின் www.ugc.ac.in/deb  என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) […]


  • பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன? இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது!

    பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன? இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது!

    பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன? இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது! தற்போது பலரின்  மனதில் இருக்கும் ஒரே கேள்வி,  எப்போது பெட்ரோல், டீசல் விலை பழைய நிலைக்குத் திரும்பும் என்பதுதான். அந்த அளவுக்கு வாகனப் பயன்பாட்டுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். பெட்ரோலிய பொருள்கள் இல்லை என்றால் துரும்பும்  நகராது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றில் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசலின்  தேவையும், விலையும், அதனால் சுற்றுச்சூழல் […]


  • புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்!

    புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்!

    புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்! பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என்று தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், அதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. முளை கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்: முளை கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், […]


  • 03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் […]