11 மணி நேர பேட்டரி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸ் இயர்ஃபோன் அறிமுகம்

11 மணி நேர பேட்டரி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸ் இயர்ஃபோன் அறிமுகம்

zebronics-zeb-soul-headphones

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், AAC கோடெக் உதவியுடன் 11 மணிநேர பேட்டரி திறன் கொண்ட ஜெப் ஸோல் என்ற புதிய வயர்லெஸ் இயர்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இயர்ஃபோன்கள் நெக்பேண்ட் வடிவமைப்பில் காந்த சக்தியுடைய இயர்பீசஸ் கொண்ட இன்-இயர் வகை இயர்ஃபோன்களுடன் மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான சவுண்ட் ரீப்பிரொடக்ஷனிற்காக, மேம்படுத்தப்பட்ட சிப்செட் மற்றும் AAC கோடெக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பேட்டரி திறன் கிட்டத்தட்ட 11.5 மணிநேரம் வரை நீடிக்கும்.

ஆண்டிராய்டு/ iOS கருவிகளுடன் இயங்கும் வகையிலும், மேலும் குரல் ஆணைகளை ஏற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கருவிகளில் ஒரே நேரத்தில் பேரிங் செய்து கொள்ளலாம். சத்த அளவு மற்றும் மீடியா கட்டுப்பாடுகளுக்கான பொத்தான்களும், அழைப்பு வந்தால் வைப்ரேஷன் அலர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்தியா முழுவதிலுமான அனைத்து முன்னணி சில்லறை விற்பனையகங்களிலும் கருப்பு, கிரே, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த Zeb-Soul கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,499